சஜித் பிரேமதாசவை, பிரதமராக்க முயற்சியா..?
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட சஜித் எதிர்பார்த்துள்ளார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பலரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில். அமைச்சர் சஜித்தின் எண்ணத்திற்கு கடிவாளமிட்டு தாம் தேர்தலில் போட்டியிட பிரதமர் எத்தணித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
இதன்போது பிரதமர் பதவி கொடுப்பதாக வழங்கிய வாக்குறுதியை அமைச்சர் சஜித் ஏற்றுக்கொண்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் தன்வசம் இழுப்பதற்கு பிரதமர் ரணில் வியூகம் வகுத்து வருவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கம்போடியா சென்று ஜனாதிபதி நாடு திரும்பியதும் அடுத்த கட்டமாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேச்சு நடத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது.
Post a Comment