பலகத்துறையில் சிலை வைப்பு, ஆசாத்சாலி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
பல நூற்றாண்டு பழமைவாய்ந்த முஸ்லிம் கிராமமான, நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை -09- அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை குறித்து, முன்னாள் மேல், மாகாண ஆளுநர் ஆசாத்சாலி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் சற்று நேரத்திற்கு முன்னர், முறைப்பாடு செய்துள்ளார்.
உடனடியாக குறித்த புத்தர் சிலையை அகற்றி பலகத்துறையில் அமைதியையும், அங்குள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
jaffna muslim இணையத்தில் வெளியாகிய 'பலகத்துறை என்ற முஸ்லிம் பகுதியில், திடீரென முளைத்த புத்தர் சிலை - பொலிசார் விரைவு, பிரதேச மக்களும் ஒன்றுகூடினர்' என்ற செய்தியுடன் கூடிய புகைப்படமும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும், மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் பலஹத்துறையில் வைக்கப்பட்ட சிலை தற்பொழுது அகற்றப்பட்டது.
ReplyDelete