ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகம், ஒரு தற்கொலை தொழிற்சாலை - இம்ரான்கான் கவனம் செலுத்த வேண்டும் - ரதன தேரர்
ஹிஸ்புல்லா ஆரம்பித்துள்ள பல்கலைக்கழகம் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் நபர்களை உருவாக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக மாற்றும் மூளை சலவை செய்யும் இடமாகவே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று -07- குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலும் இப்படியான தொழிற்பயிற்சி நிறுவனங்கள், நலன்புரி நிலையங்கள் , அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் ஷரியா சட்டம் தொடர்பான கற்கை நெறிகளை ஆரம்பித்து இஸ்லாமிய கல்வியை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.
எழுத வாசிக்க தெரியாத பழங்குடியின பிள்கைகள் இந்த பாடசாலைகளுக்கு சென்றன. ஐந்து, ஆறு ஆண்டுகள் சென்ற பின்னர் இந்த பிள்ளைகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்காக உயிரை தியாகம் செய்யும் நிலைமைக்கு ஆயுததாரிகளாக உருவாக்கப்பட்டனர்.
ஹிஸ்புல்லா பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க பணத்தை கொடுத்தது யார். சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் போன்ற நாடுகளில் எண்ணெய் கிணறுகள் இருக்கும் செல்வந்தர்கள் இவ்வாறு பணத்தை வழங்குகின்றனர்.
எண்ணெய் வளம் இருக்கும் காணி ஒரு சேக்கு அல்லது வர்த்தகருக்கு இருக்குமாயின் அவர் அந்த காணியை பிரான்ஸ் அல்லது பிரித்தானியா போன்ற நாடுகளிடம் அந்த காணியை வழங்குவார். எண்ணெயை அகழ்ந்து எடுப்பது வேறு நபர்கள், அவர்கள் சும்மா இருந்து கொண்டு பெரும் செல்வத்தை பெற்றுக்கொள்வார்.
உதாரணமாக பின்லாடனின் தந்தை ஒரு சிறிய வர்த்தகராக இருந்தார். அவர் பின்னர் கோடிஸ்வர வர்த்தகராக மாறினார். பின்லாடன் ஆபிரிக்காவில் திரிந்து ஆயுத அமைப்புகளை உருவாக்கும் போது, அவரிடம் 7 பில்லியன் டொலர் இருந்தாக அமெரிக்கா கூறுகிறது.
அவர் ஆப்கானிஸ்தானுக்கு வரும் போது அவரின் சொத்து 5 பில்லியன் டொலர். அவர் இந்த பணத்தை இப்படியான கல்விக் கூடங்களை ஆரம்பிக்கவே முதலில் பயன்படுத்தினார்.
மத்ரசா போன்ற பாடசாலைகளை அவர் ஆரம்பித்தார். பின்னர் தொழிற்பயிற்சி நிலையங்கள். அதே திட்டத்தையே தற்போது ஹிஸ்புல்லா ஆரம்பித்துள்ளார். முழு சவுதி அரசாங்கமாக இல்லாவிட்டாலும் அங்கு இஸ்லாமிய அடிப்படைவாததுடன் தொடர்புடைய பலர் இருக்கின்றனர். பல பில்லியன் டொலர் பணத்தை வைத்திருப்போர் இருக்கின்றனர்.
இந்த பணத்தின் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்கா இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதற்கான தகவல்கள் எம்மிடம் இல்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பழங்குடியினத்தவர்களின் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றார்.
பாகிஸ்தானில் பழங்குடியினர் இருக்கும் இடங்களில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குதான் தற்கொலை தாக்குதல் நடத்தும் நபர்கள் உருவாக்கப்படுகின்றனர். இதனால், ஹிஸ்புல்லா ஆரம்பித்துள்ள இந்த பல்லைக்கழகம் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் நபர்களை உருவாக்கும், மூளை சலவை செய்யும் இடமாகவே இருக்கும்.
இது தெற்காசியாவை சீர்குலைக்க ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம். இந்தியா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பங்களாதேஷ் ஆகிய அனைத்து நாடுகளும் ஹிஸ்புல்லாவின் இந்த பல்லைக்கழகம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இலங்கையின் காத்தான்குடியில் இருந்தே குண்டு தாக்குதல் நடத்த சென்றனர்.
கலகெதர, கட்டுஸ்தோட்டை, கண்டி, கம்பளை மக்கள் சிரியாவுக்கு சென்று உயிரிழந்தனர். நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. தற்கொலை குண்டுதாரிகள் சென்று போரிட்டு மடிந்தனர். ஆங்கில ஆசிரியர்கள், உயர் தொழில்சார் நிபுணர்கள் என இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உருவானவர்கள் சிரியாவுக்கு சென்று போரிட்டனர்.
நாம் அது பற்றி கேள்வி எழுப்பினோமா?. அது குறித்து பேசினோமா?. நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம். குண்டுகள் மீட்கப்பட்டன. சஹ்ரான் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போதனைகளை நடத்தியுள்ளார். இப்படியான போதனைகளை நடத்தும் நபர்களை உருவாக்குவது கடினம் என்பது எமக்கு தெரியும். நாங்களும் சமூக அமைப்புகளை உருவாக்கியவர்கள்.
8 தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்க குறைந்தது 50 ஆயிரம் பேருக்கு போதனைகளை செய்திருக்க வேண்டும். இதனால், சஹ்ரானின் கல்வி முகாம்கள் கலகெதர, கட்டுகஸ்தோட்டை, கண்டி, வெலிகம ஆகிய இடங்களில் இருந்தன. அவற்றுக்கு சென்று அவர் இந்த மனித கொலைகளை செய்யும் போதனைகளை நடத்தியுள்ளார்.
தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்திய பின்னரே எமது கண்கள் திறந்தன. இதனால், ஹிஸ்புல்லாவுக்கு பணம் கிடைத்த விதம் உட்பட அனைத்தும் குறித்து தேடி அறிய வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
These monks want to destroy Sri Lanka with their evil thoughts. Shame for Buddhism ..
ReplyDeleteமீண்டும் பாரிய பொய்யை கட்டவிழ்த்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இத்தேர்வை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும்
ReplyDeleteஎன்னா அறிவு.சஹ்ரான் பற்றி காத்தான்குடி மக்கள் வழங்கிய தகவல்கள்,உள் நாட்டு,வெளி நாட்டு புலனாய்வு தகவல்கலினை பல வருடங்களாக உதாசீனம் செய்த உங்களின் முன்னைய ஆட்சியையும்,இப்போதய ஆட்சியையும் முதலில் கேள்வி கேலும்.அதை விட்டு விட்டு எதை எதையோ பேச வேண்டாம்.
ReplyDeleteஇந்த பிக்கு சார் சொல்லுவதும் 100% உண்மை தான்
ReplyDeleteRathna monk is delivering the message of Patali Champika.
ReplyDeleteஆத்மீகவாதியாக மாற வேண்டிய தேரர், இனவாதியாக மாறிவிட்டார். பாவம். நல்லவர். ஆனால் இவர் இயக்கப் படுகிறார்.
ReplyDeleteWALNAL MULUKA SHUMMA SHORU
ReplyDeleteSHAAPIDURAVANUKKU, NALLA PUTHI,
NALLA KUNAM VARAVEI VARAZU.
ATHANAYUM OWSHI.
ARIVUKETTWAN.
Mentally ill and Terror Monk. Send him to Prison Hospital to protect the peace of Srilanka.
ReplyDelete"Protect Srilanka From Terror Monks"