Header Ads



கோட்டாபயவுக்கு எதிராக, முத்துஹெட்டிகமயின் பகிரங்க அறிவிப்பு

பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்ட போது அமைச்சர்களுடன் சிறந்த முறையில் செயற்பட்டிருக்கவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நபர்  பொதுமக்களுடன் சிறந்த முறையில் எவ்வாறு செயற்படுவார் என்ற பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியை தெரிவுசெய்த பின்னர் எம்மால் மீண்டும் குட்டுவாங்க முடியாது. அரசியல்வாதியொருவர் இங்கு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.

கோட்டாபய என்பவர் முன்னாள் இராணுவ வீரர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர். இராஜதந்திர உறவுகள் தொடர்பான தெளிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பு தொடர்பில் அவருக்கு எவ்வாறான சான்றிதழ் உள்ளது என்று எமக்கு தெரியாது.

மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டு தேர்தல்களில் நாங்கள் இணைந்து செயற்பட்ட காலங்களில், கோட்டாபய எம்மை சந்திக்கும்போது சிறந்த முறையில் அவர் உறவுகளை பேணவில்லை. அவர் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை எம்மால் சந்திக்க முடியுமா என்றுகூட தெரியவில்லை.

அவ்வாறு என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்கு மாதத்தில் 15 நிமிடமாவது ஒதுக்கி தருமாறு அவரிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவேண்டும். கதவை மூடிக்கொண்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கதவை உடைத்துகொண்டு சிறைக்கு செல்லவே நேரிடும்” என்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கத்தின் போது, பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.