தனிப்பட்ட ரீதியில் கோத்தபாயவை, சந்திப்பதை தவிர்துக்கொள்ள தீர்மானம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதனை தவிர்த்துக் கொள்ள ஐ.தே.கவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி இன்றைய தினம் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் மற்றும் அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோர் கோத்தபாயவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தனர்.
இவ்வாறு தனிப்பட்ட ரீதியில் சந்திப்பு நடத்தியமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே தனிப்பட்ட ரீதியில் கோத்தபாய ராஜபக்சவை சந்திப்பதை தவிர்துக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment