ஏன் பிள்ளை பிறக்கவில்லை என, ரதன தேரர் பரிசோதித்திருக்க வேண்டும்
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை திருகோணமலைக்கு இடமாற்றும் தீர்மானத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துச் செய்தமையை மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று -07- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரை அங்கிருந்து மாற்றுமாறு பொலிஸ் மா அதிபர் கூறும் போது பொலிஸ் ஆணைக்குழு காலையில், அதனை செய்யவா என பொலிஸ் மா அதிபரிடம் கேட்கிறது. பொலிஸ் ஆணைக்குழு மதியம் இடமாற்றத்தை இரத்துச் செய்கிறது. பொலிஸ் ஆணைக்குழுவில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள். அவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
சிங்கள தலைவரை ஆட்சிக்கு கொண்டு வர போவதாக பொதுஜன பெரமுன தற்போது கத்துகிறது. பௌத்த பிக்குமாறும் சிங்கள தலைவரை கொண்டு வர போவதாக கூறுகின்றனர். இதுவரை காலமும் வேற்று மதத்தவரும், வேற்று இனத்தவருமா ஆட்சியில் இருந்தனர்?.
தற்போது வீதியில் செல்லும் போது ரதன தேரர் ஏன் அமைதியாக விட்டார் என கேட்கின்றனர். ரதன தேரர் தோல்வியடைந்து விட்டார். ரதன தேரர், தாய்மாரின் கணவர்களை அழைத்து வந்து ஏன் பிள்ளை பிறக்குமா என்பதை பரிசோதித்து இருக்க வேண்டும். ரதன தேரர் அதனை செய்யாமல் தாய்மாரை பரிசோதித்தார். பரிசோதனைக்கு வந்த இரண்டு தாய்மார் கர்ப்பம் தரித்துள்ளனர் என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
May be its done by Rathana. So this terror Rathana going to have two more babies.
ReplyDeleteGreat work Rathana. Go ahead and increase the Sinhalese populations.
Hi Hi Hi yellow
ReplyDelete