Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக நானே களமிறங்குவேன், பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் களமிறங்குவார் - சஜித்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தானே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் சூழ்ச்சியின்போது நானே ஜனாதிபதி வேட்பாளர் என்று கட்சியின் தலைவர் எனக்கு வாக்குறுதி தந்திருந்தார். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் தானே மீண்டும் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகவும் அவர் அப்போது என்னிடம் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்குவார். ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவது உறுதி.

ஜனாதிபதித் தேர்தலை வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முயல்கின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கட்சியைத் துண்டாக்க நான் விரும்பவில்லை. கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எனது தந்தை உயிரையே அர்ப்பணித்துள்ளார். எனவே, கட்சிக்குத் துரோகமிழைக்க நான் விரும்பவில்லை. போதும் நடக்காது என்றார்.

2 comments:

  1. Sajid may be able to defeat Gota but Ranil will never beat Mahinda in general election. Ranil should leave politics respectfully right now.

    ReplyDelete
  2. மைத்ரீ ரணிலை விரட்ட பலவழிகளை கையாண்டார் . சஜித்தை களமிறக்குவதில் மைத்ரீ யின் வகி பாகம் முக்கியமானது . சஜித் வருகை மஹிந்த தரப்பு வாக்குகளை பிரிக்காது மைத்ரீ யின் கடந்தகால குற்றங்களை மூடி மறைக்க சஜித் தான் பொருத்தமான ஆள்

    ReplyDelete

Powered by Blogger.