Header Ads



சஜித் பிரேமதாசவே தமது, தலைவனாக வேண்டுமென மக்கள் கோருகின்றனர் -

அமைச்சர் சஜித் பிரேமதாசவே தமது தலைவனாக வேண்டும் என்று மக்கள் கோருவதாக தெரிவித்த பிரதி அமைச்சர் நளின் பண்டார, சஜித்தின் தலைமைத்துவம் வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவது தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

முழு நாடும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும்  என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறது என்பது அனைவருக்கும்  தெரியும். இன, மதம், கட்சி, நிற பேதமின்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் இன்று  சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே உள்ளனர். சஜித்தின் தலைமைத்துவம் வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்ற மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

அத்துடன் புதிய கூட்டணியின் உத்தேச யாப்புக்கான திருத்தங்களோடு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ததன் பின்னர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திடப்படுமாக இருந்தால் அது வெற்றிகரமாக அமையும்.

கூட்டணிக்கான சகல நடவடிக்கைகளின் பின்னணியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பார். நிச்சயமாக அவரின் பங்களிப்புடனான அரசாங்கமொன்றே உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.