Header Ads



இலங்கை இளைஞர் வலுவூட்டல், கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகள்

-தொகுப்பு – அபூ அஸ்ஜத் -

எமது நாட்டின் பெரும் சொத்தான இளைஞர்களை ஒரு அணியில் திரளச் செய்து இவர்களின் பலத்தினை நாட்டின“ அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே இலங்கை இளைஞர் வலவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் முஹம்மத் றியாஸ் தெரிவித்துள்ளார்

இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு  அவர்கூறினார்.

கேள்வி- இளைஞர்களை மையப்படுத்திய அமைப்பின் அவசியம் ஏற்படுவதற்கான காரணம் என்ன ?

பதில்  -குறிப்பாக எமது நாட்டினை பொறுத்தவரையில் இளைஞர்கள் மிகவும் பலமிக்கவர்கள் என்பதை உணர்வதற்கு பலரும் தவறிவிடுகின்றனர்.ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற போது அவர்கள் சகல துறைகளிலும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றனர.சர்வதேச ரீதியில் இடம் பெறும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளில் கலந்து கொண்டு இதனை அவதானித்த போது காணமுடிந்தததுடன்,எமது நாட்டிலும் இளைஞர்களுக்கு,இவ்வாறானதொரு களத்தினை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்டகாலமாக இருந்துவந்தது.அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது.

கேள்வி – பல்லின சமூகத்தினர் காணப்படும் எமது நாட்டில் இது எந்தளவுக்கு

சாத்தியமாகின்றது?

பதில் – இலங்கை என்பது பல்லின,கலாசாரத்தை கொண்ட மக்கள் வாழும் நாடாகும்.இவ்வாறான நாட்டில் மிகவும் முக்கியமானதொன்றாக இன ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது..தனை ஏற்படுத்த சிறந்ததொரு தளம் காணப்படுகின்றது.இளைஞர்களை பொறுத்த வரையில் அவர்களது வேகம் வித்தியாசமானது.ஒன்றை செய்ய வேண்டும் என்றால் அதனை எப்படியாவது செய்துவிட வேண்டும் என்கின்ற வேட்கை அவர்களுல் உள்ளது.இதனை சிலர் பிழையாக வழிநடத்துகின்றனர்.இதில் இருந்து இவர்களை பாதுகாப்பதுடன் அவர்களுக்கு சிறந்த வழியினை காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த சங்கத்தின் உதயத்தினை கூறலாம்.

கேள்வி -இந்த சங்கமானது தனியார் துறையுடன் தொடர்புபட்டதா  அல்லது அரசாங்கத்தின் உதவிகள் ஏதும் இருக்கின்றதா?

பதில் – கூட்டுறவு துறையுடன் இதனை தொடர்புபடுத்தி செயற்படுவதுடன் நன்மை தொடர்பில் நாம் ஏற்கனவே போதுமான அறிவினை கொண்டிருந்தோம்.இதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுறவுத் துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் கருத்து கோறினோம்.அப்போது அவர் இதனை வரவேற்றதுடன்,அரசாங்கத்தின் அனுசரனையினை பெறுவதற்கு முதல் தனியார் துறையின் பங்களிப்புடன் இவ்வாறானதொரு அமைப்பு உருவாகுவது வரவேற்கத்தக்கது என்ற கருத்தை வெளிப்டுத்தினார்.எமது இந்த அமைப்பானது கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதுடன்,சர்வஆதச கூட்டுறவு அமையத்தின் அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளதை இங்கு  குறிப்பிடலாம்.

 கேள்வி – முதலாவது செயலமர்வின் அனுபவங்கள் எவ்வாறு அமைந்திருந்தது ?

பதில் – இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின்  முதலாவது செயலமர்வும்,அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வினையும் குருநாகல் மாவட்டத்தினை மையப்டுத்தி  சியம்பலாகஸ்கொட்டுவ கிராமத்தில் நடத்தினோம்.பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களும்,யுவதிகளும் இதில் பங்கேற்றனர்.குறிப்பாக சகல சமூகங்களினையும் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டமையானது எமது முதலாவது முயற்சியின் வெற்றியாகும்.இதனையடுத்து கண்டியிலும் அடுத்த வடமாகாணத்திலும்,பின்னர் புத்தளம் மாவட்டத்திலும் நடத்துவதற்கு திட்டங்களை வகுத்துள்ளோம்.

கேள்வி- உங்களது இலக்கு எப்படிபட்டது ?

பதில் – எமது இலக்கின் முக்கியமானது இந்த நாட்டில் உள்ள இளைஞர்களைில் ஒரு இலட்சம் பேர்களை எமது சங்கத்தில் அங்கத்தவர்களாக  இணைத்துக் கொள்வது.இவர்களது முழுமையான விபரங்களை கனணி மயப்படுத்தி,அவர்களது திறமைகளுக்கு ஏற்பட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.உள்ளுரிலும்,வெளிநாடுகளிலும் வெளிவாரி கற்கைகளை பகுதி நேரமாக மேற்கொள்ள உதவிகளையும்,வழிகாட்டல்களையும் வழங்குவது.இதே போன்று நாம் அங்கத்துவத்துவத்தை கொண்டுள்ள சர்வதேச கூட்டுறவு அமையத்தின் மூலம்  வெளிநாட்டு கூட்டுறவு பல்கலைக்கழகத்தில் கற்கைளுக்கான  சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுப்தற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதே போல் சுயதொழில் முயற்சிகளுக்கு உதவி வழங்குவதுடன்,உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து அவற்றை சந்தைக்கு கொடுக்கும் வேலைத்திட்டத்தினையும் நடை முறைப்படுத்த தேவையான ஆரம்பகட்ட கொள்கை அளவிலான வரைபினையும் செய்துள்ளோம்.

இந்த இலக்கினை அடைந்து கொள்ளும் பொருட்டு  இவ்வருடத்துக்குள் அதி கூடிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.