மூடிய அறைக்குள் ரணில் – சஜித் இரகசிய ஆலோசனை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு, ஐதேகவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 7.30 மணி வரை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்த பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் மிக இரகசியமாக பாதுகாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதேகவுக்குள் கூட்டணியை அமைப்பது, மற்றும் அதிபர் வேட்பாளர் ஆகியன தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களை தீர்ப்பது குறித்தே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment