முஸ்லிம்கள் என்னை முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை, சிங்களவராயிருந்தால் ஜனாதிபதி ஆகியிருப்பேன்
நான் ஒரு சிங்கள இலங்கையராக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நான் ஒரு தமிழ் இலங்கையன். சிங்கள இலங்கையனாக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன். தன்னம்பிக்கைதான் என் முதல் பலம்.
சிறுபான்மை தமிழர்கள் (தமிழ் பேசும் முஸ்லிம்ளும்கூட) என்னை இன்னமும்கூட முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
அத்தகைய புரிதல் வருவதற்குள் நான் பொதுவாழ்வில் இருந்து விடை பெற்று விடுவேன் என்றும் நினைக்கிறேன்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
நீங்களும் ஜனாதிபதியாக எமது வாழ்த்துக்கள்
ReplyDelete