சஜித் பிரேமதாச சற்றுமுன், வெளியிட்டுள்ள விசேட அறிக்கை - முதலில் வேட்பாளர், பின்னர் கூட்டணி
ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டதன் பின்னரே கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
கூட்டமைப்பை உருவாக்குவதற்கு 100 வீதம் அல்ல, இலட்சத்திற்கும் அதிக தடவைகள் தாம் இணங்குவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துடன் ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதில் தானும் பிரதமரும் இணங்கியுள்ளதாக இன்று பத்திரிகைகளில் செய்தி வௌியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூட்டிணைவதற்கு பிரபல கட்சிகளின் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததன் பின்னர் கூட்டமைப்பை உருவாக்குவதே அவர்களின் பெரும்பான்மையானோரின் நிலைப்பாடு எனவும் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்தால் மாத்திரமே உத்தேச கூட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் , மேலும் பலர் கூட்டமைப்பில் இணைந்துகொள்வதோடு வெற்றிகரமான கூட்டமைப்பாக அது உருப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போலியான செய்திகளை வௌியிடாது ஜனாதிபதி வேட்பாளரை பகிரங்கப்படுத்தியதன் பின்னர் கூட்டமைப்பிற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவதே தற்போது இடம்பெற வேண்டும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment