Header Ads



கோத்தாபய விவகாரத்தில், முஸ்லிம் சமூகம் பிளவுபடக் கூடும் - சர்வதேச ஊடகம் தகவல்

(ரொய்ட்டர்ஸ்)

21 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிலங்கா, குறுங்குழுவாதத்தின் ஒரு பெட்டியாகவும், பெரும்பான்மை சிங்கள பௌத்தமக்களுக்கும் தமிழ் குழுக்களுக்கும் இடையிலும், சமீபத்திய ஆண்டுகளில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலும், இனப் பதற்றங்கள் நிலவுகின்ற நாடாக இருந்து வருகிறது.

பெரும்பாலான தமிழர்கள் கோத்தாபயவுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என்றாலும், முஸ்லிம் சமூகம் பிளவுபடக் கூடும்.

தான் கோத்தாபயவுக்கு வாக்களிப்பேன் என்றும்,  ஏனெனில் தற்போதைய அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது எனவும், எஸ்எச்எம். தமீம் என்ற  முஸ்லிம் அரசு பணியாளர் கூறினார்.

“அவர் பாதுகாப்பு செயலராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் சிறிசேனவும் விக்ரமசிங்கவும் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். இது முஸ்லிம்களின் வணிகங்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மோசமாக பாதித்தது” என்று வட மத்திய மாவட்டமான அனுராதபுரவில் வசிக்கும் தமீம் கூறினார்.

கொழும்பில் உள்ள முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதி ஜே.எம்.பளீல் வித்தியாசமாக உணர்கிறார்.

“எங்களுக்கு ஒரு சர்வாதிகாரி தேவை, ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான துன்பங்களுக்கு கோத்தாபய ஓரளவுக்குப் பொறுப்பு என்பதால்,  நான் அவருக்கு வாக்களிக்கமாட்டேன்” என்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பளீல் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான மிகமோசமான வன்முறை நடந்தபோது, கோத்தாபய நாட்டில் இருக்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

“ஆனாலும், ஒரு நாளுக்குள் அவரால் அதைத் தடுக்க முடிந்தது. முஸ்லிம் எதிரான கலவரம் பரவுவதை இந்த அரசாங்கத்தால் ஒரு வாரமாக  கட்டுப்படுத்த முடியவில்லை” என்று அவர் ரொய்ட்டர்ஸ்சிடம் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வழக்கு குற்றச்சாட்டுகள் கோத்தாபயவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்காது, ஏனெனில் அவருக்கு சிங்கள பௌத்த  பெரும்பான்மையினரின் பெரும் ஆதரவு உள்ளது என்று சிறிலங்காவின் அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல், விடயங்களைச் சரியாகச் செய்ய கடுமையான அதிபர் தேவை என்று நம்புகின்ற  பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களால் தீர்மானிக்கப்படும். அதிபரைத் தீர்மானிப்பதில் இருந்து  தமிழர்களும் முஸ்லிம்களும் விலகி இருப்பார்கள் ”என்றும் குசல் பெரேரா கூறினார்.

ஆங்கிலத்தில் – Aditi Shah, Shihar Aneez
தமிழில்            – கார்வண்ணன்

No comments

Powered by Blogger.