ஷாபி தொடர்பான விசாரணையில், ஒழுக்கத்திற்கு விரோதமாக செயல்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள்
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் ஷாபி சம்பந்தமாக விசாரணை நடத்தும் போது, குருணாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் அத்தியட்சகரும் ஒழுக்க விரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனக் கூறி, பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையை வழங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று -08- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய நடத்திய விசாரணைகளில் இவர்களால் ஒழுக்க விரோத செயல் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணைகளில் இவர்களின் செயல் தெரியவந்துள்ளது.
நாங்கள் வழங்கியுள்ள அறிக்கைக்கு அமைய பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நடடிக்கைகளை எடுப்பார் எனவும் ஷானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment