Header Ads



டுவிட்டரில் முழங்கிய மங்கள - கவலைப்படுகிறாராம் நாமல்

அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார். 'காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?' 

அமைச்சரின் இப்பதிவை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்திலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

No comments

Powered by Blogger.