Header Ads



கல்முனை எந்த, இனத்திற்கும் சொந்தமானதல்ல

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவில் வாழும் தமிழ் மக்கள் திட்டமிட்டு அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள சிங்கள மக்களும் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது என கல்முனை விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ணதேரர் தெரிவித்தார்.

கடந்தவருடம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட பெரியநீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் கணேஸ் தினேஸின் நினைவாக பெரியநீலாவணை இளைஞர்களினால் பஸ் தரிப்பிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

இந்நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவிக்கையில், 

கல்முனை வாழ் தமிழ் மக்கள் முப்பது வருடகாலமாக ஒரு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்திதருமாறு போராடிவருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு ஏன் இந்த அரசாங்கம் செவிசாய்க்காமல் உள்ளது. தமிழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் பேசாமல் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. நான் கல்முனைக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றது. இங்குள்ள தமிழ் மக்கள் படும் வேதனைகள் பற்றி அறிந்துள்ளேன்.  

இந்த நகரம் எந்த இனத்திற்கும் சொந்தமானதல்ல. நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமான இடம் கல்முனையாகும். இங்குவாழும் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக்கி ஆள முற்படக்கூடாது. கல்முனையிலுள்ள ஒரே ஒரு பௌத்த மதத்தலைவன் என்ற வகையில் எல்லோருக்காகவும் குரல் கொடுக்கின்றேன். முஸ்லிம் மக்களினுடைய நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறேன். என்னிடம் இன மத குல பேதம் கிடையாது. இங்கு வாழும் அனைத்து மக்களும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் விடயத்தில் நானும் சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்தேன். அம் மக்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் தட்டிக்கழிக்காது ஏற்றுக்கொண்டு உடன்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக்கொடுக்கவேண்டும் என்றார். 

8 comments:

  1. அப்படியா நல்லது.கடந்த 32 வருட போர் இடம்பெற்ற வேளையில் நீங்கள் ஏன் தமிழரூக்காக பேசவில்லை.தமிழருக்கு தனி நாடு கொடுக்குமாறு ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை.

    ReplyDelete
  2. உண்மையில் கல்முனை முழுவதும் தமிழ்ர்களுக்கு மட்டுமே சொந்தமானது.
    முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.
    “மோடி அரசின் காஷ்மீர style” பாடம் தான் இலங்கை முஸ்லிம்களுக்கும் தேவை போல.

    ReplyDelete
  3. Ajan ஏனப்பா மறந்து விட்டாய்,உங்கள் பெண்களும் எம்மிடம் பணத்துக்காக அனுப்பி வைத்துவிட்டு மதம் மாறியதாக ரீல் விடும் கதையை

    ReplyDelete
  4. இந்த பவுத்த மதகுரு சொல்வது சரிதான், கல்முனைபற்றிப்பேசவோ அதில் சமரசம் செய்து வைக்கவோ உண்மையில் சிங்கள சமூகத்திற்கு உரிமையில்லை ஏனெனில் அவர்கள் ஏனைய எல்லா சமூகங்களதும் நம்பிக்கையினையிழந்து விட்டார்கள், பெரும்பான்மைத் தமிழர்களது பார்வையில் இவர்கள் அப்பாவித்தமிழர்களைக்கொன்ற கொலை காரர்கள், முஸ்லிம்களது பார்வையில் இவர்கள் முஸ்லிம்களது உரிமையினை சொத்துக்களைக்கொள்ளையடிக்கும் கொள்ளை க்காரர்கள், உண்மையில் கல்முனைத் தமிழ்ப்பகுதியின் அபிவிருத்திக்கு தமிழ் மக்கள் கேட்கவேண்டியது சிங்கள அரசிடம்தான், தமிழர்களது அபிவிருத்திக்கு முஸ்லிம்கள் தடையாக இருந்தால் நீதிமன்றை நாடுங்கள், தமிழ்த் தனிப்பிரதேச சபையென்பது நியாயமான கோரிக்கை அதில் இருசமூகங்களும் சேர்ந்து தீர்ப்பதுதான் நீண்டகாலத்தீர்வாக அமையும், நடுவராக ஒநாயைக்கூட்டிவருவது ஆட்டிட்கு நன்மை பயக்காது, சேர்ந்து வாழக்கூடிய கௌரவமான வழிகளை இருசமூகங்களும்தான் தேடவேண்டும் முட்டிமோதுவது இலகு மீளச்சேர்வது மிகக்கடினம்

    ReplyDelete
  5. Ajan nee pagal kanapu kanrai pole?

    ReplyDelete
  6. Kalmunai muslimkitta mattum sonthamana idam

    ReplyDelete
  7. அடேய் அஜன் தேரர்கிட்ட போய் சொல்லு உண்ணாவிரதம் இருந்து பெற்றுத்தருவார்

    ReplyDelete

Powered by Blogger.