Header Ads



ஹிஸ்புல்லாஹ் நினைத்தபடி மட்டக்களப்பு, கெம்பஸை திறக்க முடியாது - ஆசுமாரசிங்க

மட்டக்களப்பு கெம்பஸ்  என்பது ஒரு நீதியான நிறுவனம் அல்ல அது ஏதோ ஒரு தவறான முறையில் வரப்பட்ட ஒரு கெம்பஸ் நிறுவனம் என்பதே உண்மை என்று ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று -13- பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை ஜனவரி மாதத்தில் நிறுவனத்தை திறப்பதாக இருந்தால் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி எடுக்க வேண்டும்.

 அவர்கள் குறிப்பிடுவது போன்று ஜனவரி மாதத்தில் அந்த பல்கலைக்கழகம் திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கப்படவில்லை.

 இந்த நாட்டில் நீதி ஒன்று இருக்கின்றது யாராலும் அதை மீறி செயற்பட முடியாது அவர் ஆளுநராக இருக்கலாம் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் நீதியை கடைப்பிடிக்காமல் எவராலும் அதை நடைமுறைப்படுத்த முடியாது.

 நாங்கள் மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பாக நீதிமன்றம் சென்று, நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுள்ளோம்.  இதன்பிரகாரம் அந்த கெம்பஸ் உரிமையாளரின் நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றம் சிறந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

2 comments:

Powered by Blogger.