பதவி துறப்பாரா மஹிந்த...?
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையினை துறந்து பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பதே சிறந்தது.
இன்று ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தை தொடர்ந்து நிச்சயம் சுதந்திர கட்சியின் பெரும்பாலானோர் எவ்வித நிபந்தனைகளுமின்றி சுதந்திர கட்சியுடன் இணைவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறந்த அரசியல் மாற்றத்திற்கான தீர்மானங்கள் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்று உத்தேச ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதையும் உத்தியோகப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையினை துறந்து பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது.
சுதந்திர கட்சியின் பலவீனத்திற்கு கட்சியின் முக்கிய தரப்பினரே முக்கிய பொறுப்பு கூற வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் அதிரடியான தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும். இது ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பாரிய சவாலாக காணப்படும். நிச்சயம் சுதந்திர கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வாரகள் என்றார்.
yYA ALLAH ARAFA DAY.MAY ALLAH BRING US GOOD AND KIND LEADER FOR OUR SRILANKA.
ReplyDelete