இலங்கை ரசிகர்களுடன் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடிய வில்லியம்சன்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கை அணியின் ரசிகர்களுடன் தனது 29 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந் நிலையில் இன்றைய தினம் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட கேன் வில்லியம்சன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கேக் வெட்டி தனது 29 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
கேன் வில்லியம்சனின் இந்த செயலானது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், பல வீரர்களில் இந்த செயலுக்காக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment