Header Ads



பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து தங்க நகைகள் திருடல்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜீ.ஜயசேனவின் தங்கநகை திருடப்பட்ட சம்பவத்துடன் ​தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், சுமேதா எம்.பி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன் ​குறித்த வளையல் திருடப்படும் காட்சிகள் பாதுகாப்பு ​கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, எம்.பியின் வீட்டில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட நபர் ஒருவரே தங்க வளையலைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டு சம்பவம் நிகழ்வதற்கு முதல் நாள் சந்தேகநபர், நாடாளுமன்ற உறுப்பினரிடம் நோய் வாய்ப்பட்டுள்ள தனது மகனின் தேவைகளுக்காக 2000 ரூபாயை கோரினாரென, சுமேதா எம்.பி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்புத் தொகுதியிலுள்ள, வீட்டிலிருந்தே 3 பவுண் பெறுமதியான தங்க வளையலே திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.