கோத்தாவை அறிவிக்க முன், மகிந்தவை சந்தித்த அமெரிக்க உயர் அதிகாரி
தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்.
இன்று முற்பகல் 11 மணியளவில், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment