Header Ads



இலங்கையில் தற்போது, அற புரட்சியே தேவைப்படுகிறது - மெல்கம் ரஞ்சித்

உலகில் தற்போது மனிதர்கள் மனித உயிர்களை மதிப்பதில்லை எனவும் மதத்தை விட மனிதர்களின் உயிர் பெரியது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மதம் காரணமாக கொலை செய்ய முடியாது எனவும் அப்படி செய்தால், அது மிகப் பெரிய பாவம் என்பதுடன் இறைவனின் படைப்புக்கு முரணானது எனவும் பேராயர் கூறியுள்ளார்.

கொட்டுகொட கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று -11- நடைபெற்ற ஆராதனையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேராசையும் பொருளாசையும் மனித வாழ்க்கையில் நெருங்கினால், வாழ்க்கை சிறைக்கூண்டுக்குள் செல்லும். ஒரு நோக்கத்தை நிறைவேற்றவே இறைவன் இந்த வாழ்க்கையை வழங்கியுள்ளார். அதனை நாம் செய்ய வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுப்பட்டது. இறைவன் எமக்கு பலவற்றை கொடுத்துள்ளார். நமது வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்கின்றது.அந்த நோக்கத்தில் நாம் எமது வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும்.

இறைவனுக்கும் எமது அயலவர்களுக்கும் பிரயோசனமாக மத வாழ்ககையை நாம் கொண்டு நடத்த வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக மதத்தையும் அரசியலுடன் கலந்து பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அரசியலும் மதம் ஒன்றுடன் ஒன்று சரிசமமானதல்ல. அரசியலில் ஓரளவுக்கு சுயநலம் இருக்கின்றது. சேவை செய்யவே அதிகாரம் இருக்கின்றது.அரசியல் உலகின் தலைவர்கள் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்களின் வாழ்க்கையை அழகுப்படுத்தும் கடமை அவர்களுக்கு இருக்கின்றது. இறைவன் படைத்த மனித இயற்கையை நேசிக்க வேண்டும்.

திறந்த பொருளாதார கொள்கை காரணமாகவே இலங்கையில் பேராசை பரவியுள்ளது. பொருளாதார கொள்கையையும் மார்க்ஸிசத்தையும் மதத்துடன் இணைக்க முடியாது. அவை மனிதனை சிறைப்படுத்தும் தர்மங்கள். இவை மனிதனை அடிமையாக்கி விடும்.

அரசியல் கட்சிகளாலும் மனிதன் சிறைப்படுத்தப்பட்டுள்ளான். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்த பின்னர் கொலைகளை செய்கின்றனர். இலங்கையில் தற்போது அற புரட்சியே தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே ஞாயிற்று கிழமைகளில் பாடசாலை பிள்ளைகளுக்கு பகுதி நேர வகுப்புகளை தடைசெய்யும் அரசியல் யோசனை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

எனினும் பகுதி நேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.அந்த வழக்கில் பிள்ளைகள் சார்பில் நாங்களும் சம்பந்தப்பட்டுள்ளோம் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.