மைத்திரி அணியையும் நமது கூட்டணியில் உள்ளீர்க்க வேண்டும் - சஜித் அணி புது அழுத்தம்
வரும் அதிபர் தேர்தலில் ஐதேக அமைக்கவுள்ள கூட்டணியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்க வேண்டும் என, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அணியினர் தற்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரக் கட்சியையும் கூட்டணியில் இணையுமாறு அழைக்க வேண்டும் என, சஜித் பிரேமதாசவின் வலுவான ஆதரவாளரான அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், புதிய கூட்டணியின் யாப்பை திருத்திய பின்னர் அது செய்யப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
அதிபர் சிறிசேன அண்மைய காலங்களில் ஐதேகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சுதந்திர கட்சியையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என எழுந்துள்ள அழுத்தங்கள் கட்சியின் உயர்மட்டத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment