Header Ads



மஹிந்தவின் பதவி தொடர்பில், முஜிபுர் ரஹ்மான்

எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் கட்சி மாற்றத்தினால், எழுந்துள்ள அவரது உறுப்புரிமை தொடர்பான முரண்பாடு குறித்து அடுத்த பாராளுமன்ற அமர்வில் ஐ.தே.க. முறைப்பாடொன்றை முன்வைக்கவுள்ளதாக  அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கூட்டமைப்பின் சார்பாகவே அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியொன்றின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர சட்டபூர்மாக இடம் இருக்கின்றது என்றால் அதனை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Dc

No comments

Powered by Blogger.