விடை பெற்றார் அம்லா (சாதனைகளின் விபரம் இணைப்பு)
தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் அஸிம் அம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதாகும் அம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ள 'Mzansi Super League' போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த அம்லாவுக்கு நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரே இறுதி சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - 124
* முதல் போட்டி - 2004.11.28 - இந்தியா
* இறுதி போட்டி - 2019.02.21 - இலங்கை
* ஓட்டங்கள் - 9,282
* அதிகூடிய ஓட்டம் - 311*
* சதங்கள் - 28
* அரைசதம் - 41
ஒருநாள் கிரிக்கெட் வரலாறு - 181
* முதல் போட்டி - 09.04.2008 - பங்களாதேஷ்
* இறுதி போட்டி - 06.07.2019 - அவுஸ்திரேலியா
* ஓட்டங்கள் - 8,113
* அதிகூடிய ஓட்டம் - 159
* சதங்கள் - 27
* அரைசதம் - 39
இருபதுக்கு - 20 கிரிக்கெட் வரலாறு - 154
* முதல் போட்டி - 13.01.2009 - அவுஸ்திரேலியா
* இறுதி போட்டி - 14.08.2019 - இலங்கை
* அதிகூடிய ஓட்டம் - 104*
* சதங்கள் - 2
* அரைசதம் - 27
அம்லாவின் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள் சில
* ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,000 ஓட்டங்களை கடந்த வீரர் (40 இன்னிங்ஸ்)
* ஒருநாள் போட்டிகளில் விரைவாக 3,000 ஓட்டங்களை கடந்த வீரர் (59 இன்னிங்ஸ்)
* ஒருநாள் போட்டிகளில் விரைவாக 4,000 ஓட்டங்களை கடந்த வீரர் (81 இன்னிங்ஸ்)
* ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5,000 ஓட்டங்களை கடந்த வீரர் (101 இன்னிங்ஸ்)
* ஒருநாள் போட்டிகளில் விரைவாக 6,000 ஓட்டங்களை கடந்த வீரர் (123 இன்னிங்ஸ்)
* ஒருநாள் போட்டிகளில் விரைவாக 7,000 ஓட்டங்களை கடந்த வீரர் (150 இன்னிங்ஸ்)
Post a Comment