Header Ads



கைதான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தினரை நட்டஈட்டுடன், அவர்களது குடும்பங்களிடம் ஒப்படையுங்கள்

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பில் நியாயமான விசாரணையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தவறிவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்துள்ளார்.

இன்று  (05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் அதிகமான இடங்களில் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை ரிசாட் பதியுதீன் ஆவார். நாம் அவரைப் பற்றி பொலிஸில்  முறைப்பாடு செய்தோம். இருப்பினும், அவரை அழைத்து ஒரு வசனம் தானும் வாக்கு மூலம் பெறவில்லை. அவரை விடுதலையும் செய்து விட்டனர்.

அவரை விடுதலை செய்வதா? இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை. அவர் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதே பொலிஸாருக்குள்ள முக்கிய பொறுப்பு. நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும்.

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அழுக்கைக் கழுவுவதற்கு அமைக்கப்பட்ட லொண்டரியே பாராளுமன்ற தெரிவுக் குழு எனவும், இக்குழுவின் அறிக்கை வருமுன்னரே அவர் அமைச்சுப் பதவியையும் எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ரிசாட் பதியுதீனுக்கு ஒரு சட்டமும் ஏனையவர்களுக்கு இன்னுமொரு சட்டமும் இருக்க முடியாது. இதனால், வாள்களை ஒப்படைக்கும் தேசிய நிகழ்வொன்றை நடாத்தி, கைப்பற்றப்பட்ட வாள்கள் அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு நாம் யோசனையை முன்வைக்கின்றோம்.

அதேபோன்று, கைது செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் உட்பட பயங்கரவாத சந்தேகநபர்களை, நட்டஈட்டுடன் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்குமாறும் நாம் பிரேரணை முன்வைக்கின்றோம்.

இதுவும் போதாது என்றால், கடந்த 21 ஆம் திகதி தேவாலயம் சென்றவர்கள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களையும் கைது செய்ய முடியும் எனவும் கம்மம்பில மேலும் கூறியுள்ளார். DC

1 comment:

  1. அவுஸ்ரேலிய பிரஜையிடமிருந்து களவாடியகோடானகோடி ரூபாவைத் திருப்பிக்கொடுத்து மிக விரைவில் சிறைசெல்ல இருக்கும் இந்த ஊத்தை வாளி, மனநிலை பாதிக்கப்பட்டு தலையில் பைத்தியமும் வேறு இருக்கும் போது உளருவதை இங்கு பிரசுரித்து வாசகர்களின் மனநிலை பாதிக்கும் விடயங்களைச் செய்யவெண்டாம் என பத்திரிகை ஆசிரியர் குழுவைத் தயவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.