"ரிசாட் பதியூதீனின் ஆதரவை பெறும் நபர், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார்"
அமைச்சர் ரிசாட் பதியூதீனை பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியில் இணைத்து கொண்டால் தோல்வியை தழுவ நேரிடும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ரிசாட் பதியூதீனின் ஆதரவை பெறும் நபர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார். நாட்டு மக்கள் அவர் மீது கடும் கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளனர்.
இதனால், தோல்வியின் சுவை அறிய விரும்பும் நபர்களே இம்முறை ரிசாட் பதியூதீனின் உதவியை எதிர்பார்ப்பார்கள். அவர் ஆதரவளித்த வேட்பாளர் மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றது உண்மை.
ரிசாட் பதியூதீனின் வெற்றி யுகம் முடிந்து விட்டது. அவரது தோல்வி யுகம் ஆரம்பித்துள்ளது. இது பயங்கரவாதம் தோற்கும் யுகம். அடிப்படைவாதம் தோற்கும் யுகம். சுற்றாடல் அழிவு தோற்கும் யுகம்.
இதனை நான் கூறவில்லை நாட்டு மக்கள் நவம்பர் மாதம் நிரூபித்து காட்டுவார்கள் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
😁😁😄😄😄😄😄
ReplyDelete