Header Ads



இலக்கு வைக்கப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் - உறுப்பினர்களை தேடி வேட்டை

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர்களாக செயற்பட்ட, ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர். 

அதன்படி இம்மூவருடன் சேர்த்து, கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும்  தேசிய உளவுத்துறையின் தகவல்களை மையப்படுத்தி தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர்களாக  செயற்பட்ட, ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 9 உறுப்பினர்கள் இதுவரை அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்களில் இருவர் ஒலுவிலில் உள்ள தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் மாணவர்களாவர்.  

இந் நிலையில், தென் கிழக்கு பல்கலைக் கழகத்தில் அம்மாணவர்கள் தேசிய தெளஹீத்  ஜமா அத் சார்பிலான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், அப் பல்கலைக்கழகத்தில் மேலும் தேசிய தெளஹீத் ஜமா அத் மற்றும்  ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளார்களா என விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 comments:

  1. உன்மையான,மிகவும் வலுவான ஆதாரங்கள் இருந்தால்,கைது செய்யவும் நாம் ஒரு போதும் அதை எதிர்க்கப் போவதில்லை.புலிகலை ஒழித்து வைத்து வளர்த்தது போல் சஹ்ரான் கும்பலை வளர்க்க போவதுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.