Header Ads



முஸ்லிம்களின் கடைகளை, தற்காலிகமாக மூடுமாறு கோரப்பட்டுள்ளது

நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சேதம் விளைவித்தமையை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மர்மநபர்களின் தாக்குதல் காரணமாக கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.

இனவாத செயற்பாட்டின் மூலம் குளிர்காய முற்படும் தீய சக்திகளின் கைசரிசையாக இது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுவப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. யாரோ செய்த சதி வேலைக்காக எம்மை தாக்க வந்தால் மாறி தாக்குங்கல்

    ReplyDelete

Powered by Blogger.