கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாடு
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கோத்தபாய ராஜபக்ச, சட்டரீதியற்ற வகையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் சிவில் நடவடிக்கையாளர்கள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோரே இந்த முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபர் பணிமனையில் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரஜாவுரிமையை ரத்து செய்த சான்றிதழை சமர்ப்பிக்காமலேயே அவர் இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஜனாதிபதியாக போட்டியிடப்போகும் ஒருவர் தெரிந்தே குற்றமிழைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் தாம் நடவடிக்கையை எடுத்திருக்க முடியும் என்று உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment