செம்மண்ஓடையில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை - பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்று வாழ்த்து
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
முஸ்லீம்களின் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இன்று திங்கள் கிழமை இலங்கை வாழ் முஸ்லீம்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த வகையில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் ஏற்பாட்டில் திறந்த வெளியிலான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் இன்று (12.08.2019) திங்கள் கிழமை செம்மண்ஓடை அல்ஹம்ரா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது நாடாத்தி வைத்தார் இதில் கல்குடாத்தொகுதி முஸ்லீம் பிரதேசங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது இன நல்லுறவை பேணும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ். ஜெயசுந்தர வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டோருக்கு கைலாகு கொடுத்து தங்களது பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.
Happy Eid.
ReplyDelete