சகல விகாரைகளுக்கும் சிங்கள, மொழியாக்க அல்குர்ஆன் வழங்கல் - பொதுபல சேனாக்கும் அனுப்பிவைப்பு
இலங்கையிலுள்ள அனைத்து விகாரைகளுக்கும் திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன் ஓர் அங்கமாக "பொதுபல சேனா" அமைப்பிற்கு திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக் "பொதுபல சேனா" அமைப்பிற்கு நேற்று 09.08.2019 அனுப்பப்பட்ட கடிதம்.
இலங்கையிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளுக்கும் திருக் குர்ஆனை வழங்கி அதை கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்ன கருத்து காலத்துக்கேற்ற கருத்தாகும்.
அது மட்டுமல்லாமல் இதனூடாக பல்லின சமூகம் கலந்து வாழும் இலங்கை மன்னில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை கலைவதற்கும், புரிந்துணர்வற்ற தன்மைகள் கலையப்பட்டு புரிந்துணர்வுமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிறந்த வழிமுறையாக கானப்படுகிறது.
எனவே உங்கள் இந்த நடவடிக்கைக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய நாம் தயாராக இருப்பதுடன், தேவைப்படும் திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை எமது அமைப்பினூடாக இலவசமாக வழங்க நாம் தயாரக இருக்கிறோம்.
அல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தேவைப்படும் விகாரைகளுக்கு அதனை வழங்கி வைப்பதற்கு, விகாரைகளின் விலாசங்களை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்வதுடன், இதனுடன் உங்களுக்கான சிங்கள குர்ஆன் மொழிபெயர்புப் ஒன்றும் இனைத்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த கருத்தை உள்ளடக்கிய சிங்கள மொழியிலான கடிதம் நேற்று 09.08.2019 "பொதுபல சேனா" அமைப்பிற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
All Ceylon Jammiyathul Ulama -ACJU which is representing the Srilankan Muslims has already distributed sinhala translation of Holy Quran to all worship places including prominent members of all communities. We strongly feel that it is only a repetition.
ReplyDeleteTherefore SLTJ should have consulted the ACJU in this regard as the ACJU is an authorised institution to look into any matters connected with Muslims of Sri Lanka

Quran PURPOSE TO READ AND FOLLOW.
ReplyDeleteNOT TO SHARE OTHERS.IF WE FOLLOW QURAN .OTHER .S WILL ACCEPT QURAN.
இவனுகள் எங்கடா பேர் போட்ரதுன்னு திரியிரானுகள்...
ReplyDelete