சஜித் பிரேமதாசவை இன்று, கொஞ்சமாக புகழ்ந்தர் ரணில்
இன்று -12- முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ரணால, ஜல்தர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றுகையில், இலங்கையில் இருக்கக்கூடிய கிராம மக்களின் அதிலும் வீடு இல்லாமல் அவதியுறுபவர்களை அறிந்து அவர்களுக்கான வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னின்று செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
தனது தந்தையாரை போன்று 24 மணிநேரமும் மக்கள் சேவை செய்யக்கூடியவராக அமைச்சர் சஜித் பிரேமதாச திகழ்வதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment