கோட்டாபாயவிற்கு முழு நாடும் பயந்துள்ளது - அஜித் பெரேரா
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு இல்லை என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொது நூலகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலக திப்பு விழாவில் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பெரோரா இன்று (13) கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நான் இன்று மட்டக்களப்பில் அரசியல்வாதிகள் மற்றும் மக்களை சந்தித்தேன். அவர்களுக்கு என்ன விருப்பம் என நான் பார்க்கின்றேன். ஏழை மக்களுடைய ஏழ்மை தன்மையை விளங்கி கொள்ளக் கூடியவர் தான் இந்த நாட்டிற்கு பொருத்தமான தலைவராக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அந்த மாதிரி ஏழ்மைத் தன்மையில் இருந்து அபிவிருத்தி செய்யக் கூடியவராகவும் ஏழ்மை தன்மையை உணர்ந்தவராகவும் ஊழல்கள் மற்றும் குற்றங்களில் இருந்து மீட்டெடுக்கு கூடியவராகவும் தலைமைத்துவம் உடைய தலைவர் அமைய வேண்டும். ஆகவே அந்தமாதிரி ஒரு தலைவர் தேவைப்படுகின்றார்.
கொழும்பு நூலகத்திற்கு அடுத்ததாக மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுநூலகத்தை டிஜிட்டல் நூலகம் திறந்து வைத்துள்ளோம். அவ்வாறே நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப நூலக்தை திறப்போம்.
இன்று குழந்தைகள் இந்த தொழில்நுட்ப ரீதியான கல்வியை கற்றுக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருப்பதனால் இதனை செற்படுத்த கூடியவர். சஜித் பிரேமதாச இருக்கின்றார்.
தெற்கில் உள்ள மக்கள் நாங்கள் நினைப்பது போல இந்த கிழக்கு மக்களும் அவ்வாறு நினைக்கின்றார்கள் என்பதை இன்று அறிய கூடியதாக இருக்கின்றது. சஜித் ஜனாதிபதியானால் இந்த நாட்டிற்கு நல்லதொரு காலம் பிறக்கும் என நினைக்கின்றேன்.
கோட்டாபாயவிற்கு முழு நாடும் பயந்துள்ளது வரலாற்றில் கோதபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் செயற்பட்டு கொண்ட செயற்பாடினால் அனைவரும் அவருக்கு பயந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இன்று இங்கு கூட சாதாரண தமிழ் மக்கள் கோட்டாபாயவிடம் இருக்கின்ற பழயை பயத்தை என்னிடம் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிழையான ஒரு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவை நியமித்து பிழைவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒரு முரண்பாடற்ற ஜனநாயகப் பூர்வமான ஒரு தலைவரை முன்னிலைப்படுத்தினால் இதனை விட போட்டி போட்டிருக்கலாம். கோட்டாபாயவுடன் இந்த போரில் சஜித் பிரேமதாச தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவரது வாக்குகளை பெற்று நாட்டிற்கு ஜனாதிபதியாவக வரக் கூடிய திறமையானவர். வெற்றி பெறுவார்.
பிரதமர் ரணில், கரு ஜயசூரியா, சஜித், மூன்று பேரும் தவைலவர்கள். அவர்கள் நாட்டை விரும்புகின்றவர்கள். அவர்களை வெளியில் அனுப்பு முடியாது. ஆனால் ஒரு பக்கத்தில் இளைஞர்கள் தலைமைத்துவம் தேவை மறுபக்கத்தில். பழைய தலைவர்களும் தலைமைத்துவமும் இருக்க வேண்டும்.
முழு நாட்டையும் ஒன்றாக்கி பலப்படுத்த கூடிய ஒரு பலம் பெருந்தியவராக இருப்பவர் சஜித் பிரேமதாச எனவே, ஐக்கிய தேசிய கட்சி யாப்புக்கமைய செயற்குழு உத்தியோகபூர்வமாக கூடி ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க முடிவெடுக்க வேண்டும்.
மேலும் ஜனாதிபதி தேர்தல் முதலில் நீதிமன்ற தீர்பு முடிந்ததும் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என்றார்.
(சரவணன்)
AZUKKU WALLAMAI PETRAVAN,
ReplyDeleteIVANTHAN ENA NINAITHUKONDIRUKKIRAN.
KANAVU KAANGIRAN.
MUTTALA ILLAYA???