வெலம்பொட பள்ளிவாசலில் கத்திகள் பிடிபடவில்லை - பள்ளிவாசல் நிர்வாகமே ஒப்படைத்தது, குர்பான் பணிகளுக்காக அதை மீண்டும் கேட்டு பெற்றுக்கொண்டது
கம்பளை - வெலம் பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் உண்மை நிலை தற்போது வெளிவந்துள்ளது.
இலங்கை சட்டத்தை மதித்து, கத்திகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அதை மீண்டும் சட்ட ரீதியாக தேவை கருதி பள்ளிவாயக்கு ஒப்படைத்த பதில் பொலிஸ் அதிபருக்கு விசாரனணகள் தொடருகின்றன.
சில மீடியாக்கள் பொய் பிரச்சாரம் செய்து இன வாதத்தை தூண்ட முயற்ச்சிக்கின்றனர்.
அதாவது பிரதேச பள்ளிவாசல் நிர்வாகமானது, குர்பான் வேலைகள் இருந்தமையால் தாம் வழங்கிய கத்திகளை, தம்மிடம் மீண்டும் வழங்குமாறும் குர்பான் பணிகள் முடிந்ததும் அவற்றை மீள ஒப்படைத்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படியே பள்ளிவாசல் ஒப்படைத்த கத்திகள் மீண்டும் பதில் பொலிஸ் அதிகாரியினால் பள்ளிவாசலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஊடகங்கள் இனவாத கண்ணோட்டத்துடன் நோக்கியதால், தற்போது இந்த விவகாரம் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.
Post a Comment