கஞ்சிபான இம்ரானை தொடர்ந்து, பொலிஸ் காவலில் தடுத்துவைக்க அனுமதி
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் எனும் பாதாள உலக குழு தலைவர் இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் சந்தேக நபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் சந்தேக நபரான கஞ்சிபான இம்ரானை செப்டம்பர் 4 ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கிய நீதவான் அன்றைய தினம் விசாரணை அறிக்கைகளை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
Hang him to Death .
ReplyDelete