Header Ads



ஹெரோயினை வழங்கினால் மட்டுமே, அழும் குழந்தைக்கு பால் கொடுப்பேன் - பொலிசில் இளம்பெண் கூச்சல்

மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் தனக்கு ஹெரோயின் போதைப் பொருளை வழங்கினால் மட்டுமே தனது குழந்தைக்கு பால் கொடுப்பேன் என கத்தி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று -06- நடந்துள்ளது.

மின்னேரிய பட்டபிலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த பெண்ணையும் இரண்டு ஆண்களையும் மின்னேரிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது பெண் ஹெரோயினை பயன்படுத்தியவாறு தனது இரண்டு வயது மகளுக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாகவும் குழந்தையும் போதையில் மயங்கி காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணிடம் பால் கேட்டு குழந்தை அழுதுள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை வழங்கினாலேயே குழந்தைக்கு பால் கொடுப்பேன் என அந்த பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

தாய் பயன்படுத்திய போதைப் பொருள் குழந்தையின் உடலுக்கும் பரவி இருந்ததுடன் குழந்தை தற்போது சாதாரணமான நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் நேற்று குழந்தைக்கு பால் மாவில் தயாரித்த பாலை பருக்கியுள்ளனர். குழந்தை தாயிடம் பால் கேட்டு அழுத போதிலும் அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை. இந்த இளம் பெண் ஹெரோயின் போதைப் பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ளார் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மின்னேரிய பட்டபிலிகந்த பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண், தனது இளைய சகோதரன் மற்றுமொரு ஆணுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண், அவருடன் கைது செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் வீட்டுக்கு எதிரில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தவர்கள் உட்பட 5 பேர் இன்று ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தனர்.

1 comment:

Powered by Blogger.