Header Ads



நீர்கொழும்பு சிலை உடைப்பு பின்னணியில், பைத்தியம் பிடித்த அரசியல்வாதிகள்

மீண்டும் இனங்களுக்கிடையிலான மோதல்களை தூண்டி அரசியல் லாபம் தேட முனையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளே நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பிரதேசத்தில் மாதா சிலை மீதான தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இதனை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியி்ட்ட அவர்,

“பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசர காலச்சட்டத்திற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனது கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் அருட்தந்தை சத்திவேல் இந்த இனவாத செயற்பாடுகளுக்குப் பின்னால் அரசாங்கமும் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்.

இந்தத் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குப் பின்னால் சில பைத்தியம் பிடித்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

இதேவேளை கன்னியா விவாரத்திலும் இன நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்ட நபர்களை இன்னும் அரசாங்கம் கைது செய்யவில்லை.

இதன் பின்னணியில் இவ்வாறான செயற்பாடுகளுக்குப் பின்னால் அரசாங்கம் இருக்கின்றது என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருப்பதாக அருட்தந்தை சத்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நன்றாக நீங்கள் தேடிபார்த்தால் இதட்கு பின்னால் உலகமகாகள்ளன் அமெரிக்கவும் அவனுடய கைகூலிகளான நம் நாட்டு சில பினமதின்னும் கள்ள கசுமாலிகள் இதற்கு பின்னால் இருப்பார்கள்

    காரணம் தற்போது அமெரிக்காவிட்கு நம் நாட்டின் பொக்கிசங்களில் ஆசைப்பட்டுவிட்டான்

    அவன் இலங்கை கிறிஸ்தவ வணகஸ்தளங்கள் அவர்களின் சொத்துக்களை நாசமாக்கும்படி அவனுடய கைகூலிகளுக்கு ஏவியுள்ளான் கிறிஸ்தவர்களுக்கு பிரச்சினையை உண்டுபன்னினால்தான் அவனுடய மதசோதரர்களுக்கு அநியாயம் நடக்கின்றது என்று சொல்லிக் அந்த நாட்டெக்குள் அவனின் ஆதிக்கத்தை உள் நுழைப்பான் இதுதான் எதார்த்தம்
    இதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன இந்துநோசியாவிலிருந்து பிரிந்த தீலி மேலும் தென்சூடான் நாடு போன்றவைகள்

    ஆகவே கிறிஸ்தவ சகோதரர்களே இதமட்டும்மல்ல இன்னும் உங்களுக்கு பல பிரச்சினைகளை நம் நாட்டுக்குள் அமெரிக்கா நிகழ்துவான்.

    ReplyDelete

Powered by Blogger.