Header Ads



கட்டுநாயக்கா விமான நிலையத்தில், ஏற்படவுள்ள மாற்றங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் 90 இலட்சம் பயணிகள் வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவு செய்யப்படும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலைய பயணிகளின் வசதிக்காக 80 விமான டிக்கட் கவுன்டர்கள் வரை அதிகரிக்கவுள்ளதாகவும் 6 குடிவரவு குடியகல்வு பிரிவுகளை புதிதாக நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் வருடத்திற்கு 6 மில்லியன் மக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிலைய பகுதிக்கு 3000 சதுர அடி அளவு பகுதி புதிதாக இணைக்கப்படவுள்ளது.

விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர் 20 விமானங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. IMMIGRATION COUNTER LAPTOPS ARE VERY OLD.ALWAYS SYSTEM ARE FAILURE.
    THERFOR PASSENGERS WASTING TIME AT IMMIGRATION COUNTER.

    ReplyDelete

Powered by Blogger.