சஹ்ரானை காப்பாற்ற ஹிஸ்புல்லாஹ் முயற்சித்ததாக பௌத்த தேரர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் கைது செய்யப்படுவதனை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிங்களே அபி என்ற அமைப்பின் தலைவர் ஜம்புரேவல சந்தரரதன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஹிஸ்புல்லாவின் பிரதான ஆதரவாளராக சஹ்ரான் செயற்பட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சஹ்ரானை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா முயற்சித்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
சஹ்ரான் குறித்த விசாரணைகளில் அரசியல் தலையீடு காரணமாக மேற்கொள்ள முடியவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார் என சந்தரரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எப்பிடியோ, எல்லாரும் சேர்ந்து ஹிஸ்புழ்ழாவை பயங்கரவாதியாக ஆக்கிப்போடனும். உலக மகா பயங்கரவாதிகள் ரத்னதேரர் ஞானசாரர் இன்னும் பலர் நாட்டிலுள்ள வீதிகளில் மிகவும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். இது எல்லாம் போதாதுன்னு ஜம்புரேவல சந்தரரத்ன தேரரும் கிளம்பிட்டார் போல. இவர்களது வெறுப்புப் பேச்சு மற்றும் கலவரங்களை ஏற்படுத்தவல்ல பேச்சுக்கள் என்பனவற்றைக் கேட்கப் பார்க்க ஆட்களே இல்லையா? எமது நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு பெறுமதியே இல்லையா? இந்த நாட்டில் என்னதாங்க நடக்குது?
ReplyDelete