Header Ads



இலங்கையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், சாகீர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டவர்கள் - இந்திய ஊடகம்


ஏப்ரல்21 பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், புகழ்பெற்ற இஸ்லாமிய மதப்போதகர் சாகீர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சாகீர் நாயக், 2016ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் இருந்து வெளியேறி, தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார்.

200 மில்லியனுக்கும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட பீஸ் தொலைக்காட்சியின் ஸ்தாபகரும் அவரே.

அவரது பிரசாரங்களால் ஈர்க்கப்பட்டவர்களே இலங்கை மற்றும் பங்களாதேஸில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகிர் நாயக் அமைப்பின் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதுடன், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அந்த அமைப்பு நிதி வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக 212 கோடி இந்திய ரூபாய்கள் வரையான பணத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வழங்கி இருப்பதாகவும் இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சாகீர் நாயக் உள்ளிட்ட அடிப்படைவாத இஸ்லாமிய தலைவர்களை கைது செய்வதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

6 comments:

  1. இனத்துவேச நடவடிக்கைகளில் கடைசித் துரும்பாக இலங்கையும் இந்தியாவைப் பின்பற்ற இருக்கின்றது இப்போது நன்றாகத்தெரிகிறது. அதன் விளைவு நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவும் அவமானமும் தான்.

    ReplyDelete
  2. Mannang katti... zakir nayak in pechaatraliku payandu modi arasaangam ippadi poi solhirazu. Sivasena,Rss poanra theewirawazihalai muzalil adakkattum india arasu.

    ReplyDelete
  3. இது அப்பட்டமான பொய். இவ்வாறான ஊடகங்கள் முடக்கப்படவேண்டும்

    ReplyDelete
  4. லூசாட சொங்கி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல

    ReplyDelete
  5. எழுதியவன் காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகிஸ ஜமாத்தைச் சேர்ந்தவன் போன்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. இந்தியாவுக்கு பைத்தியம். தீவரவாதத்திற்கு சாக்கீர் நாயக் எதிர்ப்பு என்பதை அவருடைய உரையே சாட்சி சொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.