சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கஞ்சிப்பான, இம்ரானின் பிறந்தநாள் கொண்டாட்டம் - நவ சிங்களே அமைப்பும் விமர்சனம்
கஞ்சிப் பானே இம்ரானின் பிறந்த நாள், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் கொண்டாடப்பட்டுள்ளதாகவும், இதன்போது வெட்டப்பட்ட கேக் அப்பிரிவிலுள்ள உயர் அதிகாரிகள் முதல் அத்தனை பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நவ சிங்களே அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 13 ஆம் திகதி இம்ரானின் பிறந்த நாள் காணப்பட்டது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், கஞ்சிபானே இம்ரான், அவரின் தந்தை, அவரது மூத்த சகோதரன் ஆகியோர் இணைந்தே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
இவ்வாறு கேக் சாப்பிட்டவர்கள் அனைவரும் அதனை வாந்தி எடுப்பதற்கு தயாராகுமாறும் தேரர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், கஞ்சிபானே இம்ரானுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவர் சுமுகமான முறையில் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கும் வீடியொ காட்சியொன்று தன்னிடம் காணப்படுவதாகவும் அதனை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கஞ்சிபானே இம்ரானுடன் உறவு கொண்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் தேரர் மேலும் தெரிவித்தார். Dc
2
கஞ்ஜிபானே இம்ரானுடன் இருக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகள் அவருடன் கலந்துரையாடும் போது இம்ரானின் கையில் விலங்கு இடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாகல்கந்தே சுதந்த தேரர், அவரது ஊடகவியலாளர் சந்திப்பில் போட்டுக் காட்டிய வீடியோ காட்சி குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Post a Comment