Header Ads



ஹிஸ்புல்லா நிரபராதி,, சகல குற்றசாட்டுக்களில் இருந்தும் விடுதலை - மகிழ்ச்சி பொங்க தெரிவிப்பு


தன் மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்திற்கு முன்னால் வைத்து இன்று -06- ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தன் மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பெட்டிகளோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதாகவும் அது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வெற்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹிஸ்புல்லா சேர்! ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம். இலங்கையின் தீவிரவாத தடுப்பு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலர்கள் நீதிமான்களாக இருந்ததினால் தாங்களும் நிரபராதியாகி முஸ்லிம் சமூகத்தின்மீதான களங்கமும் துடைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.