ஜனாதிபதித் தேர்தலில் பழைய வியூகங்களை, முஸ்லிம் தலைமைகள் தவிர்க்க வேண்டும்
ஜனாதிபதித் தேர்லுக்கான வேட்பாளர் தெரிவு சூடு பிடித்துள்ளதால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பழைய அரசியல் வியூகங்களை விடுத்து காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய தந்திரோபாயம் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய உறுதியான பாதுகாப்பையும் இருப்பையும் கவனத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
உயிர்த்த ஞாயிறு சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கி வருகின்றனர். முஸ்லிம்களுடைய தனித்துவ ரீதியிலான கலாசார விடயங்களை அவமதித்தல், பள்ளிவாசல் தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் வீடுகள் என சேதத்துக்குள்ளாக்குதல், அரசியல் ரீதியாக பலமிழக்கச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு ரீதியான இனவன்முறைகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் அனைத்துக்கும் ஒரு விடை காண்பதற்கான காலம் மிக நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே ஜனாதிபதித் தேர்தல் ஆகும்.
கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளுக்கும் அபிவிருத்தி என்ற போர்வைகளுக்கும் அப்பால் முஸ்லிம்களுடைய உரிமை பாதுகாப்பு என்கின்ற விடயத்தில் சிந்தித்து பயணிக்க வேண்டியிருக்கிறது. வெறுமனே பதவிகளுக்கும் அமைச்சுக்களுக்கும் சுகம் காணும் நிலையைக் கடந்து முன்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புக்களையே நாம் இனம் கண்டு பயணிக்க வேண்டும்.
இந்நாட்டின் சிங்கள, முஸ்லிம் மக்களின் நிரந்தரமான சக வாழ்வையும் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று பட்டு இராஜினாமாச் செய்ததைப் போன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கை எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
Next president srilanka democratic party contest Mr Rohan pallewtta will vote him.present225members corrupted by unp and slfp slpp.
ReplyDeleteYES MR.CHAIRMAN
ReplyDeleteYou are absolutly correct,further we have to arrange awareness programme very soon with positive thinking
if united we can produce results
முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் நலன் சார்ந்த விடயங்களை விடுத்து எமது முஸ்லீம் சமூகத்தின் நலன்களுக்காக இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
ReplyDeleteonru pattal undu vaalvu
ReplyDelete