கோத்தபாய ஜனாதிபதியானால், ரணிலுக்கு பிரதமர் பதவியா? கொழும்பு டெலிகிராபின் பரபரப்புத் தகவல்
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகிவிட்டதாக கொழும்புடெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கோத்தபாய ராஜபக்ச சிந்தித்து வருகின்றார் எனவும் கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தை 2020 பெப்ரவரியில் கலைக்கலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருதுகின்றார், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ரணில்விக்கிரமசிங்கவை பிரதமராக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலிற்கு பின்னரும் இதனை தொடரும் எண்ணம் காணப்படுகின்றது எனவும் ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான வாய்ப்புகள் இன்னமும் வெகுதொலைவில் உள்ள போதிலும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் பிரதமருக்கும் இடையிலான புரிந்துணர்வு அதிகரித்து வருவதாகவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதி கனவுகளிற்கு பிரதமரும் திலக்மாரப்பன சாகல ரத்நாயக்கவும் சிறந்த முறையில் உதவி வருகின்றனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத்தான் ஐ.தே.க தலைவர் தோல்வியடையக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரைத்தேடுகின்றார் போலும்.
ReplyDelete