Header Ads



சஜித்தை ஜனாதிபதியாக்க முழு, அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - பதுளையில் ஹரின்

குடும்ப ஆட்சியினை ஏற்படுத்த வேண்டிய தேவை  ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. ஐக்கிய தேசிய கட்சி மக்களாணையினை மதிக்கும் வேட்பாளரையே தொடர்ந்து களமிறக்கியுள்ளது. இந்த  ஜனநாயக பொது கொள்கையே இனியும் தொடரும். அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என  அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சேவையாற்றிய  அமைச்சர் சஜித் பிரேமதாஸவை  ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

அவரை வெற்றிப்பெறசெய்ய  எந்நிலைக்கும் செல்ல தயார்.  நாட்டு மக்கள் எதிர்பார்க்கும்  ஜனநாயக மிக்க அரசாங்கம் நிச்சயம்  ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்படும் என்பதில்  எவ்வித சந்தேகமும்  கிடையாது என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.