பிக்குகளின் ஒழுக்கம் பற்றி என்னிடமுள்ள, தகவல்களை பார்த்து ஒழுக்காற்று குழு அதிர்ச்சியடைந்தது
பௌத்த பிக்குகளின் ஒழுக்கம் தொடர்பில் அண்மையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், அது தொடர்பில் நேற்றைய தினம் அவரிடம் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கட்சியின் ஒழுக்காற்று குழுவின் விசாரணைகளில் முன்னிலையானதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரஞ்சன், “என்னிடம் உள்ள தகவல்களை பார்த்து ஒழுக்காற்று குழு அதிர்ச்சியடைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதாவது பௌத்த பிக்குகள் பற்றிய தமது விமர்சனத்தை நிரூபிக்கக்கூடிய சான்றுகள் தம்மிடம் உண்டு என்ற அர்த்தத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் ரஞ்சனுக்கு எதிராக மீண்டும் பௌத்த பிக்குகள் கடும் அதிருப்தியை வெளியிடக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மீண்டும் ஓர் நாள் ஒழுக்காற்று குழு எதிரில் முன்னிலையாக உள்ளதாக ரஞ்சன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.ரஞ்ஞன் அனைத்து வண்டவாலங்கலையும்,தண்ட வாலங்கலில் ஏற்றுங்கல்.ஆதாரங்களை பொது மக்கள் பார்வைக்காக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் இன்னும் சூப்பரா இருக்கும்.
ReplyDelete