Header Ads



முகத்தை மூடுவதை விட்டுக்கொடுக்க முடியாதென்ற நிலைப்பாடு வலுக்கிறது - ஞாயிறு முக்கிய கூட்டம்

முகத்தை மூடி நிகாப் அணிவதற்கு எதிராக சட்டரீதியில் போராட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

அந்தவகையில் நேற்று வியாழக்கிழமை பல்வேறு முஸ்லிம் தரப்பினரும் பங்கேற்றுள்ள முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முதற்கட்டமாக முறைப்பாடுகளை செய்ய வேண்டுமென ஆலோசிக்கப்பட்டு இந்த முறைப்பாடுகளை பெண்கள் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி இதுபற்றி ஆராயும், மற்றுமொரு கூட்டம் தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்றுமாறு அரசியல் வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய வருகிறது.

10 comments:

  1. நாங்கள் எங்களுடைய உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது இவ்வாறு விட்டுக்கொடுப்போமானால் இனிவரும் காலங்களில் எல்லாமே விட்டுக்கொடுக்க வேண்டி வரும்.இலங்கையில் அண்மைய குண்டு தாக்குதலில் முகம்மூடி கொண்டு பெண்களின் ஆடை அணிந்தா தாக்குதல் நடத்தினார்கள்!!

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், சிறந்த ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    முயற்சியை கைவிடாதீர்கள், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்

    ReplyDelete
  3. இந்த முகத்தை மூடும் உடைகளை வீட்டுக்குள் மட்டும் பயன்படுத்தலாமே.
    ஏனெனில் வெளியில்? பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் பயப்படுகிறார்களாம், பாவம்

    ReplyDelete
  4. அ.இ.ஜ.உலமா இந்த விடயத்தில் கவனமெடுத்து, இசுலாசுத்தின் வழி என்ன? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி அல்லாஹ் வெற்றிகரமாக ஆக்கிவைப்பானாக!

    ReplyDelete
  6. எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம்.சிறுபான்மையாக வாழும் நாட்டில் ஒரு முஸ்லிம் ஏன் அரசியல் செய்ய வேண்டுமென்று கேட்டால் அதற்கான முதல் பதில் தமது சமய கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு என்பது விடையாகும்.இந்த விடயம் தெரியாவிட்டால் ஒருவர் அரசியல்வாதியாக இருப்பதில் அர்த்தமே இல்லை.

    ReplyDelete
  7. Ajan உண்ட வீட்டு வேலைய மட்டும் நீ பாரு,
    நம்ம வேலைய நாம பார்ப்போம்.

    ReplyDelete
  8. Mr Ajan: வெறும் மேலோடு உடம்பு முழுக்க சாம்பலையும் சந்தனத்தையும் பூசிக்கொண்டு தலையில ஒரு குடும்பியையும் கட்டிக்கொண்டு நெத்தியில பெரிய ஓட்டை போட்டமாதிரி ஒரு போட்டும் வைத்துக்கொண்டு காதில பூவையும் சொருவிக்கொண்டு ரோட்ல திரீர உங்க கோவில் பூசாரியைப் பார்த்தால் எங்களுக்கும் பயங்கரமாகவும் பயமாகவும் இருக்கு. அவர்களை வெளில் வராமல் கோவிலுக்குலேய் இருக்க சொல்லுங்கள்.

    ReplyDelete
  9. இந்த கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொள்வதை பள்ளிநிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சிங்கப்பூர் சென்று அங்குள்ள பள்ளிவாயல்களைப் பாருங்கள். பள்ளியில் தலைவர் ஆண் ஒருவர் என்றால் பெண் சகோதரி ஒருவர் உபதலைவராகவும், நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பாக மற்றொரு முஸ்லிம் சகோதரி இருக்க முடியும் என்றால் ஏன் இலங்கையில் முடியாது. அல்லாஹ்வுடைய கட்டளைப்படி பள்ளிவாயலில் 50% ஆண்களுக்கு என்றால் மற்ற 50% பெண்களுக்கு உரியது என்பதை ஆண்தரப்பினர் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.எனவே யார் விரும்பி முகம் மூடுகின்றரோ அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பெண்கள் முன்வந்தால் அதற்கு ஆதரவாக அனைத்து முஸ்லிம் ஆண்களும் களத்தில் இறங்குவது அவர்களின் கடமை என்பதை நினைவில் நிறுத்திச் செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  10. ஒவ்வொருவருக்கும் தாம் அணியும் ஆடையைத் தீர்மானிக்க உரிமை உண்டு. அதற்காக வாதாடலாம் வழக்காடலாம் ஆனால் மதம் என்று சொல்லி மற்றவர்களை மெய்சிலிர்க்க வைக்கத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.