Header Ads



மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை, ஊழலே எங்கும் வியாபித்துள்ளது - மல்கம் ரஞ்சித் விமர்சனம்

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழலே எங்கும் வியாபித்துள்ளதாக கார்தினல் மல்கம் ரஞ்சித் விமர்சனம் செய்துள்ளார்.

மீரிகம புனித ரோகுஸ் தேவாலய புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேவாலயத்தில் நடைபெற்ற முதல் திருப்பலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உயர்மட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடக்கம் கீழ் மட்டம் வரை லஞ்சம், ஊழல் வியாபித்துள்ளது. சகலரும் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்பட முனைகின்றனர்.

ஒழுக்கச் செயற்பாடுகள் காண்பதே அரிதாக உள்ளது. உலகில் ஒழுக்கமற்ற நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்று வருவதை வீதியில் இறங்கியவுடன் அவதானிக்கலாம். நாட்டின் உயர்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மலிந்திருப்பதே இதற்கான காரணம்.

முன்னொரு காலத்தில் பாடசாலையொன்றை ஆரம்பித்தால் சிறைக்கூடமொன்றுக்கு மூடுவிழா நடைபெறும் என்று கூறுவார்கள். ஆனால் இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் சிறைச்சாலைகள் மூடப்படவில்லை. நிரம்பி வழிகின்றது.

நமது சமூக அமைப்பில் பெரும் குறைபாடுகள் காணப்படுகின்றது. ஒழுக்கமான முறையில் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

பத்திரிகைகளை கையில் எடுத்தாலே வன்முறை மற்றும் வன்செயல் தொடர்பான செய்திகள் தான் கூடுதலாக காணப்படுகின்றன என்றும் கார்தினல் மல்கம் ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார்.

2 comments:


  1. இந்த அவலத்தைப்போக்கி இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்ற உங்கள் திட்டத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம், கார்த்தினாள் ஆண்டகை அவர்களே!

    ReplyDelete

Powered by Blogger.