கோட்டாபயவை களமிறக்கியது பயங்கரமானது, நாட்டை கட்டியெழுப்ப முடியாது - சந்திரிக்கா
ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பெசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை.” எனவும் தெரிவித்தார்.
மேலும், “கட்சியா? நாடா என்று வரும்போது ஸ்ரீ லாங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.” எனவும் தெரிவித்துள்ள அவர், “கோட்டாவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவு செய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை இருக்கின்றன அரசியலில் ஈடுபடுவதுக்கு ஆனால் யாரு வெற்றிபெற வேண்டுமென்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ReplyDeleteDon't worry Madam. We have Dr. Rohan Pallewatta for President.
ReplyDelete